![]() கோவாவில் பூஜாவுக்கு பதில் பியா ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() "கோவா" படத்தில் பூஜாவுக்கு பதில் பியா ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் "கோவா". இதில் ஜெய், பிரேம்ஜி, வைபவ், சினேகா, ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா நடிக்கின்றனர்.
இன்னொரு நாயகி வேடத்துக்கு பூஜாவை தேர்வு செய்தனர். சில காரணங்களால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பியா நடிக்கிறார். இவர் "ஏகன்", "பொய் சொல்லப் போறோம" படங்களில் நடித்தவர்.
இப்போது விஷ்ணு ஜோடியாக "பலே பாண்டியா"வில் நடித்து வருகிறார். இதுகுறித்து பியா கூறும்போது, "கோவா படத்தின் ஷ¨ட்டிங்கில் ஜூலை 17ம் தேதி முதல் பங்கேற்கிறேன்.
மலேசியா, ஹாங்காங் நகரங்களில் நான் நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். பின் கோவாவில் நடக்கும் ஷ¨ட்டிங்கிலும் பங்கேற்பேன்" என்றார். |