![]() பின்னணி குரலால் விருதை இழந்தார் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() பின்னணி குரலால் கேரள திரைப்பட விருதை இழந்தேன் என்றார் பிரியாமணி.
பிரியாமணி நடித்த ‘திரைக்கதா’ என்ற மலையாளப்படம் வெற்றிகரமாக ஓடியதுடன், மிகுந்த பாராட்டையும் பெற்றது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா கேரக்டரில் பிரியாமணி நடித்திருந்தார்.
இந்த படத்திற்காக அவருக்கு கேரள அரசு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விருது பிரியங்காவுக்கு கிடைத்தது. இதுபற்றி பிரியாமணி கூறியதாவது:
‘திரைக்கதா’ படத்தின் கதை பிடித்துதான் நடித்தேனே தவிர, விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நடிக்கவில்லை. படம் வெளிவந்த பிறகு பத்திரிகைகளும், விமசகர்களும் எனது நடிப்பை பாராட்டி விருது கிடைக்கும் என்றார்கள். அப்போதும் எதிர்பார்க்கவில்லை.
அந்த விருது வேறொருவருக்கு வழங்கப்பட்டது. அதுவும் என்னை போன்ற நடிகைக்குதானே வழங்கப்பட்டது என்பதில் சந்தோஷம்தான்.
விருது கிடைக்காதது பற்றி கவலைப்படவும் இல்லை.
ஏன் கிடைக்கவில்லை என்று ஆராயவும் இல்லை. என்றாலும் கடைசி ரவுண்டு வரை எனது பெயர் இருந்ததாகவும், இருவரும் சம புள்ளியில் இருந்ததாகவும், கடைசியில் அவர் சொந்தக்குரலில் பேசியதால் அவருக்கு வழங்கப்பட்டதாகவும், டப்பிங் குரல் கொடுக்கப்பட்டதால் எனக்கு கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள்.
அப்படி நடந்திருந்தால் அதுவும் நியாயம்தான். மலையாளம் பேசத் தெரிந்தாலும் சினிமாவுக்கான உச்சரிப்பை கற்று வருகிறேன். இனி வரும் படங்களில் மலையாளத்திலும் சொந்தக்குரலில் பேசுவேன்.
இவ்வாறு பிரியாமணி கூறினார். |