![]() காதல் கதையை இயக்குகிறார் பிரபு சாலமன் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() "லாடம்" படத்தையடுத்து காதல் கதையை படமாக்குகிறார் பிரபு சாலமன். இதுகுறித்து அவர் கூறியது: "கிங்" படத்துக்கு பின் "கொக்கி", "லீ", "லாடம்" ஆகிய படங்களை த்ரில் கதையாக இயக்கினேன். இப்போது எனது பாணியை மாற்றி, முழுக்க முழுக்க காதல் கதையை படமாக்க உள்ளேன். இதில் காமெடி முக்கிய பங்கு வகிக்கும். ஷலம் ஸ்டுடியோ இப்படத்தை தயாரிக்கிறது. புதுமுகம் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக "நாடோடிகள்" பட நாயகி அனன்யா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஜூலை 10&ம் தேதி முதல் மூணாறு, இடிக்கி, தேனி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது பற்றி கேட்கிறார்கள். எல்லா நடிகர்களும் ஒரு படத்தில் அறிமுகமாகித்தான் வந்தார்கள். முதல் படம்தான் அவர்களின் அடையாளமாக இருக்கும். கதைதான் படத்தின் ஹீரோ. அதற்கு யார் பொருந்துகிறார்களோ அவர்களை தேர்வு செய்கிறேன். இவ்வாறு பிரபு சாலமன் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |