"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


முத்த காட்சியில் நடிப்பது தப்பா?


















முத்தக்காட்சியில் நடிப்பது தப்பா? என்றார் ‘பூ’ பார்வதி. சசி இயக்கிய ‘பூ’ படத்தில் நடித்தவர் பார்வதி. இவர் கன்னடத்தில் ‘மலே பராலி மஞ்சு இராலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஹீரோ ஸ்ரீநகர் கிட்டியுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி கூறியதாவது: இந்திய சினிமாவுக்கு முத்தக்காட்சி ஒன்றும் புதிதில்லை. சினிமாக்களில் அழுகை, கோபம், சண்டை, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற பல காட்சிகள் இருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் கதை, காட்சி என்று ஏற்றுக்கொள்ளும் போது, முத்தக்காட்சியை மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.

காதலர்களாக நடிக்கும் போதோ, கணவன் மனைவியாக நடிக்கும்போதோ இக்காட்சி கதைக்கு தேவையாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? சினிமா, வாழ்க்கையைத்தான் பிரதிபலிக்கிறது. வெறும் முத்தக்காட்சிக்காக யாரும் படம் பார்க்க வரவேண்டாம். படத்தை பார்த்தால் அதன் நியாயம் புரியும். இவ்வாறு பார்வதி கூறினார்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections