![]() முத்தமிட ஷெரீன் மறுத்தாரா? ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() சஞ்சய்ராம் இயக்கும் படம் ‘பூவா தலையா’. இதில் கிருஷ்ணகுமார், உதயா ஹீரோக்கள். ஷெரீன், மேகா நாயர் ஹீரோயின்கள். அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி நிருபர்களிடம் கிருஷ்ணகுமார் கூறியதாவது: ‘வீரமும் ஈரமும்’ படத்துக்குப் பிறகு ‘பூவா தலையா’வில் நடிக்கிறேன். சண்டைக்காட்சியில் டூப் போடாமல், ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன். தாராபுரத்தில் சிமென்ட் தொழிற்சாலையில் வில்லன்களுடன் மோதியபோது, பாசி வழுக்கி விழுந்து எல்லோரும் காயம் அடைந்தோம். எனக்கு ஷெரீன் ஜோடி. புது ஹீரோ என்றாலும், காதல் காட்சியில் நெருக்கமாக நடித்தார். சஞ்சய்ராம் எழுதிய ‘தீக்கோழி தீக்கோழி தீக்கோழிடா... தீப்பட்ட அந்த இடம் தித்திக்குதுடா’ என்ற பாடல் காட்சியில், முத்த காட்சி இடம்பெறுகிறது. இதில் நடிக்க மாட்டேன் என்று ஷெரீன் சொன்னதாகவும் இதனால் பிரச்னை ஏற்பட்டதாகவும் செய்தி வெளியானது. அது உண்மை இல்லை. அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இது ஆக்ஷன் படம்தான். இருந்தாலும் சென்டிமென்ட், காமெடி, காதல் எல்லாமே இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணகுமார் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |