"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


கந்தசாமி ஆகஸ்ட்டில் ரிலீஸ்




























கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக "கந்தசாமி" படம் ஆகஸ்ட்டில் ரிலீசாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் படம் "கந்தசாமி". சுசிகணேசன் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலையில் திரைக்கு வர இருந்தது. ஆனால் இப்போது ஆகஸ்ட் மாதத்துக்கு ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர். "தமிழ் சினிமாவில் முதல்முறையாக சூப்பர் ஹீரோ கதை படமாக்கப்பட்டுள்ளது.

அதனால் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் ஏராளமாக உள்ளது. அது முடிய இன்னும் சில தினங்கள் ஆகும். அதனால் இப்படத்தை ஆகஸ்ட்டில் திரையிட திட்டமிட்டுள்ளோம்" என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections