![]() கவர்ச்சியாக நடிக்க மீனாட்சியை வற்புறுத்தினாரா? ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() மீனாட்சியை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்தவில்லை என்றார் இயக்குனர் திருமலை. ‘தீ நகர்’ படத்துக்கு பிறகு திருமலை இயக்கும் படம் ‘அகம் புறம்’. இதில் ஷாம் ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்பில் மீனாட்சியை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்தியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து திருமலையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ‘அகம் புறம்’ வித்தியாசமான கதை. ஒவ்வொரு மனிதனும் தனது தவறுகளை மறைத்து வாழ்கிறார்கள். அதுபோல ஹீரோவும் வாழ்கிறார். அந்த தவறு குடும்பத்துக்கு தெரிய வரும்போது என்னென்ன நடக்கும் என்பதுதான் கதை. ஷாம் முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம். மீனாட்சி அநாதை குழந்தைகளுக்கு உதவும் மாடர்ன் பொண்ணு. தன் மனசாட்சியை தவிர யாருக்கும் பயப்படாதவர். பெண்கள் எப்படி ஆடை அணிவது என்பது அவர்கள் சுதந்திரத்தை பொறுத்தது என்பதை வலியுறுத்தும் விதமாக நவீன ஆடைகளை அணிவார். இந்த கேரக்டர் பற்றி முதலிலேயே அவரிடம் கூறி ஒப்புதல் பெற்றோம். பாடல் காட்சிகளில் கிளாமர் இருக்கும் என்று முன்பே கூறியிருந்தோம். அதை ஒப்புக்கொண்டுதான் அவர் நடித்தார். அவர் நடிக்க மறுக்கவும் இல்லை, நாங்கள் வற்புறுத்தவும் இல்லை. இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |