"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


200வது படம் எது? விஷ்ணுவர்தன் குழப்பம்












கன்னட நடிகர் விஷ்ணுவர்தன், தனது 200வது படம் எது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ளார் விஷ்ணுவர்தன். இவர் 37 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இப்போது "அப்தமித்ரா"வின் (சந்திரமுகி) இரண்டாவது பாகமான "அப்தரக்ஷகா"வில் நடித்து வருகிறார்.

இப்படத்தை பி. வாசு இயக்கி வருகிறார். இப்படம்தான் விஷ்ணுவர்தன் 200வது படம் என திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் கடைசியாக ரிலீசான "சாஹச சிம்ஹா" படம்தான் அவரது 200வது படம் என திரைத்துறையினர் சொல்கிறார்கள். ஆனால் இதில் எது தனது டபுள் செஞ்சுரி படம் என்பதை அறியாமல் குழப்பத்தில் இருக்கிறார் விஷ்ணு.

இதுகுறித்து விஷ்ணுவர்தன் கூறும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றனர். "அப்தரக்ஷகா" எனக்கு நெருக்கமான படமாக உள்ளது. இப்படம் எனது 200வது படமாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் என்னுடன் சந்தோஷத்திலும் துன்பத்திலும் உடன் இருந்தவர்களுக்கு இப்படத்தை காணிக்கை ஆக்குகிறேன் என்றார்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections