"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


ஆக்ஷனுக்கு மாறினார் காந்தி கிருஷ்ணா






முதல்முறையாக ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் காந்தி கிருஷ்ணா கூறினார். "நிலா பெண்ணே", "செல்லமே", "ஆனந்த தாண்டவம்" ஆகிய காதல் கதைகளை படமாக்கியவர் காந்தி கிருஷ்ணா. அவர் கூறியதாவது:

சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" நாவலை "ஆனந்த தாண்டவம்" பெயரில் படமாக்கினேன். இப்படத்துக்கு நேர்மையாக உழைத்தேன். ஆனாலும் எதிர்பார்த்தது போல படம் ஓடவில்லை. ஏன் என்பது புரியவில்லை. தொடர்ந்து காதல் கதைகளை படமாக்குவதாகச் சொல்கிறார்கள்.

அந்த இமேஜிலிருந்து விடுபட விரும்புகிறேன். காதல் கதைகளிலும் வெரைட்டியான படங்களை தந்தேன். இப்போது ஆக்ஷன் கதை எழுதி வருகிறேன். இது வழக்கமான தாதா கதையாக இருக்காது. லாஜிக்குடன் கூடிய ஸ்டைலான ஆக்ஷன் படமாக இருக்கும். இதில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பார். ஜூலையில் ஷூட்டிங் தொடங்கும்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections