![]() சண்டாளன் என்ற வார்த்தைக்கு சென்சார் தடை வைகை இயக்குனர் வாக்குவாதம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() பி.பி.ஜி என்டர்பிரைசஸ் சார்பில் பி.பி.ஜி.குமரன், பி.பி.ஜி.டி. சங்கர் தயாரிக்கும் படம் "வைகை". சுந்தரப்பாண்டி இயக்கியுள்ளார். பாலா, புதுமுகம் விசாகா ஜோடி. இப்படம் பற்றி சுந்தரப்பாண்டி கூறியதாவது: மதுரை அருகே 80- களில் நடந்த உண்மை காதல் கதையே இப்படம். காதலர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முயன்றனர். அப்போது எதிர்பாராத சம்பவம் நடந்தது. அந்த நிஜஜோடி இன்றும் வாழ்ந்து வருகிறது. இப்பாத்திரங்களில் பாலா, விசாகா நடிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நிஜஜோடியும் ஒரு காட்சியில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் சென்சாருக்காக படம் திரையிடப்பட்டது. ஒரு காட்சியில் "சண்டாளன்" என்ற வார்த்தை வந்தது. அதை நீக்க வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். ஒருபாடலில் "சண்டாளி" என்ற வார்த்தையை அனுமதித்தீர்கள். இப்போது தடை செய்வது ஏன்? என்றபோது, அந்தப் பெயரில் ஜாதி இருக்கிறதாம்.நீக்கித்தான் ஆக வேண்டும்" என்றார்கள். அதேபோல் ஒரு பாடலில் "வயகாரா" என்ற வார்த்தை இடம்பெற்றது. அதையும் நீக்க வேண்டும் என்றார்கள். மாற்றினோம். பிறகே "யு" சான்றிதழ் கொடுத்தார்கள். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. |