![]() ஜப்பானில் ஷூட்டிங் பன்றி காய்ச்சல் பீதியில் அசின் பன்றி காய்ச்சல் பீதியால் ஜப்பானில் நடக்கும் ஷ¨ட்டிங்குக்கு அப்பா இல்லாமல் தனியாக செல்கிறார் அசின். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() அசினின் அப்பா ஜோசப், வெளிநாட்டில் ஷ¨ட்டிங் நடந்தால் மகளுடன் செல்வார். அசின் நடித்த எந்த படமாக இருந்தாலும் வெளிநாட்டில் ஷ¨ட்டிங் நடக்கும்போது ஜோசப்பும¢ உடன் இருப்பார். குறிப்பாக இந்தி சினிமாவுக்கு சென்றபின், அசினை நிழல்போல ஜோசப் பின்தொடர்வதாகவும் பாலிவுட்டில் கூறப்படுகிறது.
இந்நிலையில் "தி நைன்டின்த் ஸ்டெப்" ஆங்கில படத்தில் அசின் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜப்பானிய நடிகர் தடநோபு அசானோ நடிக்கிறார். இப்பட ஷூட்டிங் ஜப்பானில் நடக்க உள்ளது. அப்போது அசினுடன் ஜோசப் செல்லவில்லை என்பதுதான் பாலிவுட்டில் இப்போது ஹாட் நியூஸ். இது குறித்து அசின் கூறும்போது, "நான் எப்போதுமே அப்பாவின் செல்லப் பிள்ளைதான். அதே நேரம் எனது சுதந்திரத்தை நான் விரும்புகிறேன். தனியாக சென்றாலும் வெளிநாட்டில் பன்றி காய்ச்சல் பீதி இருப்பதால் அங்கு என்ஜாய் செய்ய முடியாது என நினைக்கிறேன். இதனால் அப்பா என்னுடன் வரவில்லை" என்றார். |