"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


குறும்படம் இயக்குவதில் சுதந்திரம்






சா.கந்தசாமியின் ‘விசாரணை கமிஷன்’ நாவலை குறும்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த். இப்படம் பற்றி வசந்த் கூறியதாவது: சா. கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற கதையை முதலில் குறும்படமாக எடுத்தேன்.

இதற்கு வரவேற்பு இருந்தது. இதையடுத்து அவரது, ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலை குறும்படமாக்கி இருக்கிறேன். சாதாரண மனிதன் அசாதாரணமான சம்பவத்தில் சிக்கும் போது அவன் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை.

நாவலை படமாக்கும்போது வரிக்கு வரி அப்படியே எடுக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் அது எழுதபட்ட காலம், சூழல் வேறு மாதிரி இருந்திருக்கும். அதனால் நாவலின் ஆத்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு இதை உருவாக்கி இருக்கிறேன்.

கமர்ஷியல் படங்களை கூட நாவல் மாதிரி எடுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நான் இயக்கிய படங்களில் இதற்கான முயற்சி செய்திருக்கிறேன். வணிக ரீதியான தேவைகள் இல்லாத, குறும்படங்களில் பணியாற்றும் போதுதான் அதிகபட்ச சுதந்திரம் கிடைக்கிறது.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections