"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


ஆங்கில இசை நாடகம் தயாரிக்கிறார் சரத்குமார் மகள்










சரத்குமார் மகள் வரலட்சுமி ஹாட் ஷ¨ என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளார். இதன்மூலம் மேற்கத்திய நடன மாஸ்டர் ஜெஃப்ரி வார்டானுடன் இணைந்து Ôமாமா மியாÕ என்ற ஆங்கில இசை மேடை நாடகம் தயாரிக்கிறார்.

பயிற்சி பெற்ற நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. நிருபர்களிடம் வரலட்சுமி கூறியதாவது: 7 வயதிலிருந்து நடனம் பயில்கிறேன். மேற்கத்திய நடன பயிற்சிகளை ஜெஃப்ரி வார்டன் அளித்தார்.

அவருடன் இணைந்து "மாம்மா மியா" என்ற ஆங்கில இசை மேடை நடன நாடகம் தயாரிக்கிறேன். இதற்கான ஸ்கிரிப்டை மித்ரன் வடிமைத்து இயக்குகிறார். தாய், மகள் பற்றிய கதை. தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கும் இளம்பெண், இறுதியில் அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கரு.

ஜூலை 4, 5&ம் தேதிகளில் சென்னை மியூசிக் அகடாமியில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களிலும் நவம்பர் மாதம் மும்பை, டெல்லி, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளிலும் நடக்கிறது. இவ்வாறு வரலட்சுமி கூறினார். நிகழ்ச்சியில் சரத்குமார் பங்கேற்று மகள் வரலட்சுமி மற்றும் இசை குழு கலைஞர்களுக்கு வாழ்த்து கூறினார்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections