![]() பைக் ரேஸ் வீரர் ஹீரோ ஆனார் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ‘சிலந்தி’ படத்தை தொடர்ந்து ஜி கம்பெனி சார்பில் ‘உதிரம்’, ‘சுவேதா 5/10 வெலிங்டன் ரோடு’ ஆகிய படங்களை சங்கர் தயாரிக்கிறார். ‘சுவேதா’ படத்தில், பெங்களூரைச் சேர்ந்த பைக் ரேஸ் வீரர் கிரீஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக கீர்த்தி சாவ்லா, வில்லனாக ஷிவ் நடிக்கின்றனர். சஞ்சய் இயக்குகிறார். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், சாலக்குடி பகுதிகளில் நடந்தது. சமீபத்தில் கீர்த்தி சாவ்லா ஆடிய ஒரு பாடல் காட்சி, சாலக்குடி அருவியில் படமானது. இப்படத்தில் ஹீரோ கிரீஷின் அறிமுக காட்சி, 8 நிமிடங்கள் இடம்பெறும் பைக் சேஸிங் காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூரை இணைக்கும் நைஸ் சாலையில் விசேஷ அனுமதி பெற்று இக்காட்சியைப் படமாக்கினர். இதில் பங்கேற்ற 15 ரேஸ் பைக்குகள், தலா 20 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்டவை. ஒரு பைக்கிற்கு ஒருநாள் வாடகை, 15 ஆயிரம் ரூபாய். தினமும் 3 லட்ச ரூபாய் வீதம், 3 நாட்கள் கிரீஷ் பங்கேற்ற விறுவிறுப்பான பைக் சேஸிங் காட்சியைப் படமாக்கியதாக தயாரிப்பாளர் சங்கர் சொன்னார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |