"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தரமான படங்களுக்கு சன் பிக்சர்ஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்




தரமான படங்களுக்கு சன் பிக்சர்ஸ் ஒத்துழைப்பு கொடுக்கும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கூறினார்.

ஸ்ரீமூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் ஜி.கிச்சா தயாரிக்கும் படம் ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’. புதுமுகங்கள் விஷ்வா, இர்பான், தன்வி வியாஸ் நடிக்கிறார்கள்.

பி.வி.பிரசாத் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா, கமலா திரையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் சேரன் பேசும்போது, ‘தமிழ் சினிமா புதியவர்களை வரவேற்கிறது. இது ஆரோக்கியமான சூழ்நிலை. சன் பிக்சர்ஸ் பொழுது போக்கு படங்களை வாங்கி மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கிறது.

பத்திரிகைகளால் சிறப்பாக பாராட்டப்படும் படங்கள் மக்களை சென்று சேரமுடியாத சூழ்நிலை உள்ளது. ‘பசங்க’ போன்ற நல்ல படங்கள் அந்த வரிசையில் உள்ளது. சன் பிக்சர்ஸ் இதுபோன்ற தரமான நல்ல படங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்து சன் பிக்சர்சின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா பேசியதாவது: சன் பிக்சர்சின் முதல் வெற்றிப்படியாக இருந்த பி.வி.பிரசாத்தும், 6&வது படியாக இருந்த ஜி.கிச்சாவும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

நிச்சயம் இதுவும் வெற்றிப்படமாக அமையும். இங்கு பேசிய சேரன், சன் பிக்சர்ஸ் சிறிய படங்களையும் வாங்க வேண்டும் என்றார். சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தபோது எங்கள் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன், ‘நமது நிறுவனத்தில் பெயர் முக்கியம்.

நாம் வாங்கும் படத்தால் நமது நிறுவனம் மட்டும் சம்பாதித்தால் போதாது, தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள் அனைவரும் சம்பாதிக்க வேண்டும்’ என்றார். இந்த அடிப்படையிலேயே சன் பிக்சர்ஸ் இதுவரை 8 படங்களை வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்கள் 45 நாட்கள் பெரும் போராட்டத்தை நடத்துகிறோம். தரமான படங்களுக்கு சன் பிக்சர்ஸ் எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ் திரைக்கதையை பி.வி.பிரசாத்திடம் கொடுத்து படத்தை துவக்கி வைத்தார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹீரோ விஷ்வாவையும், மிஷ்கின் ஹீரோயின் தன்வி வியாசையும், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஏ.ஜே.டேனியலையும் அறிமுகப்படுத்தினார்கள்.

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், இயக்குனர்கள் வி.சேகர், ராஜ் கபூர், விஷ்ணுவர்த்தன், சுப்பிரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், ஷக்தி சிதம்பரம், சுந்தர்.சி, காவல்துறை அதிகாரி ஆர்.சேகர், தொழிலதிபர் இளங்கோ உட்பட பலர் பேசினார்கள். முடிவில் தயாரிப்பாளர் ஜி.கிச்சா நன்றி கூறினார்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections