"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தோரணை - சினிமா விமர்சனம்
















கிராமத்தில் பொறுப்பில்லாமல் திரியும் விஷாலிடம் அவர் தாய் சிறுவயதில் காணாமல் போன அண்ணனை கண்டுபிடிக்குமாறு நிர்ப்பந்திக்கிறார்.

அன்னை கட்டளைப்படி அண்ணனை தேடி பட்டணம் வருகிறார் விஷால். அங்கு பிரகாஷ்ராஜ், கிஷோர் என இரு பெரும் தாதாக்கள் மோதலால் நகரமே அல்லோலப்படுகிறது. விஷால் கண் எதிரே ஒருவனை கொல்கிறார் கிஷோர். கொலைகாரனை போலீசுக்கு அடையாளம் காட்டுமாறு பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார். கிஷோரோ தன்னை காட்டி கொடுத்தால் உயிர் இருக்காது என எச்சரிக்கிறார்.

இரு தாதாக்கள் நடுவில் சிக்குகிறார். இடையிடையே அண்ணனையும் தேடுகிறார். ஒரு கட்டத்தில் கிஷோர் தன் அண்ணன் என தெரிகிறது. அவரை சுட்டு செத்து விட்டதாக தூக்கி வீசுகிறார் பிரகாஷ்ராஜ். காப்பாற்றும் விஷால் அண்ணனுக்காக ரவுடி கும்பலுடன் மோதி அழிப்பது கிளைமாக்ஸ்...

ஆக்ஷன், காமெடியை கலந்து செய்துள்ளார் விஷால்... நண்பன் விஷால் அறையில் தங்கி அங்குள்ள குடித்தனக்காரர்களை குடிபோதையில் அல்லோப்படுத்துவது ரகளை.

ஸ்ரேயாவிடம் உடைந்த மோட்டார்சைக்கிளை ஏமாற்றி விற்பது... காதலி நினைப்பில் பரவை முனியம்மாவுக்கு முத்தமிடுவது கலகலப்பு....

பிரகாஷ்ராஜ் கிஷோருடன் மோதும் சண்டைக்காட்சிகள் மிரள வைக்கின்றன. உடம்பில் குத்திய பச்சையை வைத்து பயங்கர தாதாவை அண்ணன் என அடையாளம் காண்பது அதிர்ச்சி திருப்பம்...

ஸ்ரேயா காதலிக்க வந்து போகிறார். ஊரு விட்டு ஊரு வந்து சண்டை போடும் பழைய கதையில் புது மாதிரி ஆக்ஷன் சாயம் பூசியுள்ளனர். பிரமாண்ட அரங்குகளும், வில்லன் துரத்தல்களும் பிரமிக்க வைக்கின்றன. நகரை கலக்கும் இரு தாதாக்களுடன் மோதி ஒற்றை ஆளாய் பதட்டமில்லாமல் காதலியோடு சுற்றும் விஷால் சீன்கள் நடந்து போகின்றன.

டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன் காமெடி களை கட்டுகிறது. பிரகாஷ்ராஜ், கிஷோர் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். மணிசர்மா இசையில் பாடல்கள் மனதில் தங்கவில்லை.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections