"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஜேம்ஸ்பாண்ட் ஸ்பாட்டில் சூர்யா


















தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக..... ஏதோ டுபாக்கூர் படம் போடுவதற்கான தொலைக்காட்சி விளம்பரம் அல்ல இது. நிஜமாகவே தமிழ்த்திரையுலகில் முதன்முறையாக 'ஆதவன்' படத்திற்காக ஐஸ்லேண்டில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பணத்தை தாறுமாறாக செலவழிக்க இஷ்டப்பட்டதுபோல 'ஆதவனை' 'சுட்டு' வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். 'அயனி'ல் சூர்யாவின் டெடிகேஷனை பார்த்து மிரண்டுபோன ரவிக்குமார் இதில் இன்னொரு பங்கு அதிகமாக சூர்யாவுக்கு வேலைக் கொடுத்துள்ளாராம்.

செட்டிநாடு அரண்மனையில் 200 துணை நடிகர்நடிகைகள் பங்குபெற பாடல்காட்சி, பிரம்மாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சி, டார்ஜிலிங்கில் சூர்யா நயன்தாரா, முரளி சரோஜாதேவி பங்குபெற்ற 'மாசி மாசி...' பாடல் என 'ஆதவன்' பாடல் காட்சிகளை பிரத்யேக கவனத்துடன் எடுத்துவருகிறார் இயக்குனர்.

'ஆதவன்' யுனிட் அடுத்து டெண்ட் அடிக்கப்போகும் லொகேஷன்தான் ஐஸ்லேண்ட். தாமரை எழுதிய

"ஏனோ ஏனோ பனித்துளி

தேனோ பாலோ எரியுது எரியுது...."

என்ற பாடல்காட்சிதான் இங்கு படமாக்கப்படவுள்ளதாம். இதற்காக 35 பேர் கொண்ட குழு ஐஸ்லேண்ட் சென்றுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் நடித்த 'எ வியூ டு கில்', 'டை அனதர் டே' போன்ற படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை அங்கு காலடி எடுத்துவைக்கும் முதல் நாயகன் சூர்யாதானாம்.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections