![]() 'மைக்ரோ மினி' மீனாட்சி ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() பொதுவாகவே நமது புகைப்படக் கலைஞர்களுக்கு நடிகைகளைக் கண்டால் உற்சாகம் ஊற்றெடுக்கத் துவங்கிவிடும். அதுவும் கவர்ச்சி பிரளயமாய் வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்... பிளாஷ் மழையில் நனைத்து விடுவார்கள். நேற்று அப்படி நனைந்தவர் மீனாட்சி. இடம்.. சத்யம் சினிமாஸ். படம்.. மலை மலை. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கறுப்பு மைக்ரோ மினியில் கவர்ச்சி கண்களைக் கூசச் செய்யுமளவுக்கு வந்திருந்தார் மீனாட்சி. ஆடியோ வெளியீட்டை, ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, 'மைக்ரோ மினி மீனாட்சியை' ஆன மட்டும் க்ளிக்கித் தள்ளினார்கள் புகைப்பட கலைஞர்கள். சத்யம் வளாகமே இந்தக் கவர்ச்சிக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க, ஒண்ணுமே தெரியாத மாதிரி வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரி... பொதுநிகழ்ச்சிகளில் நாகரீகமாக உடையணிந்து வரவேண்டும் என்று கொஞ்சநாளைக்கு முன் ஸ்ரேயாவுக்கு கட்டுப்பாடெல்லாம் போட்டார்களே... என்னாச்சு அது! ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |