"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சிம்புவை காதலிக்கிறேனா?-த்ரிஷா
















கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவுடன் தீவிரமாக லவ்வுவதாக த்ரிஷா குறித்து வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அலை படத்துக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில்தான் இந்த லவ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிட்டதாக சில பத்திரிகைகளில் 'பிட்' ஓடிக் கொண்டிருக்கிறது!

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இந்த மாதிரி வதந்திகள் இப்ப எனக்கு பழகிப் போச்சு. ஏன்னா... நான் இன்டஸ்ட்ரிக்கு வந்து 7 வருஷம் ஆகுது. இனிமேலும் இப்படிப்பட்ட செய்திகள் வரலேன்னாதான் ஆச்சரியம்.

அதைப் பத்தி நான் கவலைப் படறதே இல்லை. ஆமா... இல்லன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லக் கூட எனக்குப் பிடிக்கல", எனும் த்ரிஷா தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அது ஏன் தெலுங்கில் மட்டும் ஸ்பெஷல் அக்கறை?

தெலுங்கில் நான்தான் ராணி மாதிரி. அந்த அளவு மரியைதையோட என்னை நடத்துறாங்க. எனனோட சமீபத்திய படம் கிங் பெரிய ஹிட் அங்கே. அதனால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புகிறேன்.

அதுக்காக தமிழைப் புறக்கணிக்கலை. இங்கும் வித்தியாசமான வேடங்களைச் செய்ய விரும்புகிறேன், எனும் த்ரிஷாவுக்கு சென்னையில் மட்டும் 1000 ரசிகர் மன்றங்கள் உள்ளனவாம்!

இதில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம்.

அது சரி... 'தெலுங்கு ராணி' சொன்னா சென்னை ரசிகர்கள் செய்துதானே ஆகணும்!




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections