"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

அஜித் படம் வேண்டாம் : மம்தா
















'தல' படத்தில் வாலாட்ட நாய்க்குட்டிகளுக்கே ஆசை இருக்கும்போது, நாயகிகளின் ஆசைக்கு சொல்லவா வேண்டும். ஆனால் அவர் படத்துல நடிக்கமாட்டேன் என ஒதுங்கிக் கொண்ட மம்தாவுக்கு ரொம்பவே தைரியம்தான்.

ஏன் மம்தா ஏன்?

இந்த இரண்டு ஏன்களுக்கும் மம்தா சொன்ன விளக்கம் இதுதான்...

'அசல்' படத்தில் நடிப்பது தொடர்பாக இயக்குனர் சரனிடம் பேச வந்தேன். இதில் சமீரா ரெட்டி ஒரு நாயகி. இரண்டாவது நாயகி வேடத்துக்கு என்னிடம் பேசினார்கள். தமிழில் இதுவரை தனி ஹீரோயினாகவே நடித்திருக்கிறேன். இரண்டாவது ஹீரோயின் வேடம் என்பதால் இதில் நடிக்க மறுத்துவிட்டேன்.

மலையாளத்தில் சீனிவாசனின் 'பாசஞ்சா' படத்தில் நடித்தேன். இப்படம் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து 'கிலாஃபத்' என்ற படத்தில் நடிக்கிறேன். இது விருதுக்காக தயாராகும் படம். இன்னொரு படத்துக்கான பேச்சு நடக்கிறது. தமிழில் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். நல்ல படமாக இருந்தாலும் எனது கேரக்டரும் வலுவாக இருக்கவேண்டும். அத்தகைய படங்களுக்கே முன்னுரிமை தருவேன்" என்றார்.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections