![]() இசையமைப்பாளர் ஆனார் கருணாஸ் ![]() நந்தா படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான கருணாஸ், சமீபத்தில் வெளியான திண்டுக்கல் சாரதி மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்தார். தற்போது தனது வெற்றிப் பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். சினிமா பாரடைஸ் பட நிறுவனம் சார்பாக சக்தி சிதம்பரம் இயக்கும் படம் ராஜாதி ராஜா. இந்த படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்நிக்தா, மும்தாஜ், காம்னா நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் கருணாஸ், இசையமைப்பாளராக அறிமுக மாகிறார். பால் ஜேக்கப் என்பவருடன் இணைந்து இரட்டை இசையமைப் பாளர்களாக பணிபுரிகின்றனர். இது குறித்து கருணாசிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: 1987 ஆம் ஆண்டு துவங்கி ஏராளமான மேடை கச்சேரிகள், கானா பாடல் கேசட்டுகள், ரீ மிக்ஸ் ஆல்பங்கள் என இசைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தேன். இயக்குனர் பாலா என்னை நடிகராக சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். இறைவன் அருளால் தற்போது ஓரளவுக்கு நாலுப்பேருக்கு தெரிந்த நடிகராக உருவெடுத்துள்ளேன். இதனை நான் தக்கவைத்து கொள்ளவே விரும்பு கிறேன். இருப்பினும் கல்லூரி காலம் தொட்டு இசைத் துறையில் நாட்டம் இருந்ததாலும், என் மனைவியின் விருப்பத்தின்படியும், இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது சக்தி சிதம்பரம், லாரன்ஸ் ஆகியோர் என்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய 20 வருட நண்பர் பால் ஜேக்கப் என்னுடன் இணைந்து இப்படத்தில் இசையமைக்கிறார். இதுவரை 3 பாடல்கள் இசையமைத்துள்ளோம். அதில் ஒரு பாடலை நானும், என் மனைவி கிரேசும் இணைந்து பாடியுள்ளோம். பழைய புகழ் பெற்ற பாடலான எலந்தபழம் பாடலை வித்தியாசமான முறையில் ரீமிக்ஸ் செய்துள்ளோம். அந்த பாடலுக்கு லாரன்ஸ், மீனாட்சி ஆடியுள்ளனர். இதுவரை யாரும் கேட்காத ஒரு இசைக்கோர்வையாக இப்படத்தின் இசை பேசப்படும். இவ்வாறு கருணாஸ் கூறினார். கருணாஸ் இசையமைப்பாளராக வெற்றி பெறுவார் என்று படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரமும், கதாநாயகன் லாரன்சும் வாழ்த்து தெரிவித்தனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |