நிர்வாணமாக நடித்தார் ஹீரோ எம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘உதிரம்’. இது முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சங்கர் கூறியதாவது:‘அபோகலிப்டோ’ ஆங்கிலப் படம் என்னை மிகவும் பாதித்தது. அதை போன்றே முழுக்க அடர்ந்த காட்டுப் பகுதியில் படம் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுதான் ‘உதிரம்’. காட்டையே பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டு நாட்டில் வேட்டையாடும் வில்லனை அந்த காட்டையே ஆயுதமாக பயன்படுத்தி அழிக்கும் ஹீரோவின் கதை. மும்பை மாடல் ஜெகத் ஹீரோ. வனத்துறை பாதுகாவலர்களிடம் படத்துக்காக சிறப்பு பயிற்சி பெற்றிருக்கிறார். கொச்சியில் 10-வது படித்துக் கொண்டிருந்த சாந்தினியை ஹீரோயினாக்கியிருக்கிறோம். தலக்கோணம் காட்டுப்பகுதியிலும் ஆந்திரா, ஒரிசா எல்லை காடுகளிலும் ஒரே நேரத்தில் 3 கேமராக்கள் வைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். படத்தின் கிளைமாக்ஸ் சேற்றில் நடக்கிறது. 8 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த காட்சிக்காக, உடல் முழுவதும் சேற்றைப் பூசிக் கொண்டு நிர்வாணமாக நடித்துள்ளார் ஜெகத். இது ஆபாசமாக தெரியாத அளவில் படமாக்கியுள்ளோம்.இவ்வாறு சங்கர் கூறினார். ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |