![]() பக்தன் ![]() எஸ்.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "பக்தன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார். கதாநாயகியாக மதிஷா தோன்றுகிறார். வில்லனாக ராம் என்பவர் அறிமுகமாகிறார்.
ஒரேயொரு பாடல் காட்சிக்கு ஸ்ரீபாரதி என்ற புதுமுகம் நடனமாடி உள்ளார். பிரபல இயக்குநர் பாசிலிடம் உதவியாளராக இருந்த மல்லிகை ராஜன் என்பவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து அவர் கூறியதாவது, பொருந்தா காதலையும், அதன் விரும்பத் தகாத விளைவுகளையும் புதிய முறையில் கூறும் படம்தான் "பக்தன்'.
மாற்றான் மனைவி என்பது தெரியாமல் மையல் கொள்ளும் கதாநாயகன், உண்மை தெரிந்தவுடன் எடுக்கும் அதிரடி முடிவுகள் தமிழ் திரைக்களத்துக்கு புதிய அம்சமாக இருக்கும்.
காமம் சார்ந்த கதையாக இருந்தாலும் ஆபாசம் என்பது துளியும் இருக்காது. திரையுலகில் 34 வருடங்கள் இருந்துள்ளேன். இத்தனை வருட அனுபவங்களின் தொகுப்பாக இப்படம் இருக்கும்' என்றார்.
செல்வா ஒளிப்பதிவு செய்ய, விஸ்வகுரு என்பவர் இசை அமைக்கிறார். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. |