"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

இந்தியில் முக்கால் நிர்வாணம்; தெலுங்கில் முழு நிர்வாணம்!!




'தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளது.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூமில் நடித்த கங்கணா, இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். முன்பு ராஸ் என்ற இந்திப் படத்தில் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக நடித்து பெரும் பரபரப்பேற்படுத்திய கங்கணா, இப்போது தெலுங்கில் முதல்முறையாக ஒரு படம் நடிக்கிறார்.

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்தப் படத்தில், ஒரு காட்சியில் கட்டாயம் முழு நிர்வாணமாக நடிக்க வேண்டியுள்ளதாம். இந்த கண்டினுக்கு ஒப்புக் கொண்ட கங்கணா, அதற்கு பெரும் தொகையை சம்பளமாகக் கேட்க மறுபேச்சுப் பேசாமல் கொடுத்துவிட்டார் பூரி.

இந்த நிர்வாணக் காட்சியில் துணை நடிகைகளையோ, வேறு மாடல்களையோ பயன்படுத்தப் போவதில்லையாம். முழுக்க முழுக்க கங்கணாதான், பிறந்த மேனியாகத் தோன்றப் போகிறாராம்.

சென்சார்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாதா...?!

"தெரியும் தெரியும்... ஆனால் எப்படி எடுத்தா அவங்களால காட்சியை வெட்ட முடியாதோ, அப்படி எடுக்கப் போறோம்", என்கிறார் பூரி ஜெகன்னாத்.

ஒரு முடிவோடதான் கிளம்பறாங்க போல!




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections