"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

மாசிலாமணி












கலாஷேத்ராவின் நடனம் பயிலும் பணக்கார பெண்ணை பக்கா லோக்கலான பேட்டையில் வசிக்கும் வாலிபர் காதலித்தால் எப்படி இருக்கும். இதுதான் மாசிலாமணி படத்தின் கதை. கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் ஆர்.என்.ஆர்.மனோகர் முதன் முறையாக இயக்கும் இந்தப் படத்தில் காதலில் விழுந்தேன் வெற்றி ஜோடி, நகுல், சுனேனா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு நகுல், சுனேனா ஜோடியை முற்றிலும் வேறு கோணத்தில் காட்டினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாக இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் கூறுகிறார். இவர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஐ.வி.சசி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். பல வருடம் அனுபவம் மிக்க இவரது முதல் படம் இது.

நகுலும், இந்தப் படத்தில் தனது பாத்திரம் குறித்து உற்சாகமாக இருக்கிறார். காதலில் விழுந்தேன் பாணியிலிருந்து முற்றிலும் வேறு பட்ட விதத்தில் நடித்திருப்பதாக கூறும் நகுல், நிஜ வாழ்க்கையில் தனது குணத்தின் பிரதிபலிப்பை படத்தில் காணலாம் என்கிறார். டி.இமான் இசையில் பாடல்கள் முடிந்து விட்ட நிலையில், விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது மாசிலாமணி.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections