![]() நடனப்புயலாக ஆசைப்படும் ஸ்ரேயா! ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ஒரு படத்திலாவது முழு நீள நடன நடிகையாக நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரேயா. ஸ்ரேயாவுக்கு இந்த ஆண்டு தமிழில் மிக முக்கியமான காலகட்டம். அவர் விகரமுடன் நடித்த கந்தசாமி, விஷாலுடன் தோரணை, சரத்குமாருடன் நடித்த ஜக்குபாய், தனுஷுடன் நடித்த குட்டி ஆகிய நான்கு மிகப்பெரிய படங்கள் வெளியாகின்றன. இது தவிர இந்தியில் தீபா மேத்தா படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படமும் இந்த ஆண்டுதான் வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், முழு நீள நடன நடிகையாக நடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரேயா கூறியிருப்பதாவது: சின்ன வயசிலிருந்தே நடனம் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். முறைப்படி நடனம் கற்றுக் கொண்டேன். ஆனால் சினிமாவில் அந்த நடனத் திறமையைக் காட்ட முடியவில்லை என்ற ஏக்கம் இன்னும் உள்ளது. இதற்காக யாராவது முழு நீள நடனப் படம் ஒன்றை எடுத்தால், சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல் நடித்துக் கொடுப்பேன் என்றார் ஸ்ரேயா. தமிழில் கந்தசாமிக்குப் பிறகே புதுப்படங்களில் ஒப்பந்தமாகப் போகிறாராம். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |