"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

பிறந்தநாள் கொண்டாடிய நமீதா








பிரபல திரைப்பட நடிகை நமீதா தன்னுடைய பிறந்தநாளை 4 ஆண்டு களுக்கு பிறகு பெற்றோர்களோடு மும்பையில் கொண்டாடினார்.

கவர்ச்சிப் புயலாக அறிமுகமாகி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நமீதா, நேற்று முன்தினம் தன்னுடைய பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோர்களோடு பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் கூறினார். தொடர்ச்சியாக ஷூட்டிங் இருந்ததால் படப்பிடிப்புகளிலேயே பிறந்தநாளை கொண்டாடி வந்ததாக கூறிய அவர், இந்த முறை மும்பையில் உள்ள தனது வீட்டில் பெற்றோர்களோடு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

நமீதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத் திட்டங் களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப் பட்டன. பாண்டிச்சேரியில் நமீதா ரசிகர் மன்றம் சார்பில் 7 டியூஷன் சென்டர்கள் அமைக்கப்பட்டன.

கோவையில் மாலை நேர டியூஷன் சென்டரில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 3 கம்ப்யூட்டர்களும் வழங்கப்பட்டன.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections