![]() தமிழுக்கு வரும் பீகார் கிளி ![]() ![]() ![]() ![]() வி. பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் தோழி. கதாநாயகனாக பிரபா நடிக்கிறார். இவர் பிறப்பு வெளிவரவுள்ள மிட்டாய் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் பீகார் அழகி அர்ச்சனா சர்மா அறிமுகமாகிறார். இவர்களுடன் மாணிக்க விநாயகம் மற்றும் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நான்கு கதாபாத்திரங்களை மையப்படுத்தி முழுக்க முழுக்க புதிய திரைக்கதை உக்தியுடன் படமாக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை மதித்து நடந்தால் வாழ்க்கையில் எல்லா வளமும் வந்து சேரும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம். கதை, திரைக்கதை எழுதி இளங்கோ லட்சுமண் இயக்குகிறார். எஸ்.பி. ராஜ்பிரபு வசனம் எழுத, ஆர்.சங்கர் இசையமைக்கிறார். எஸ்.பாலா ஒளிப்பதிவு செய்ய, ஜே.பி. ஆறுமுகம் தயாரிப்பு மேற் பார்வையில், ஆர்.ஷியாமளா, தாராபுரம் கு. மாணிக்கவாசகம் இருவரும் இணைந்து தயாரிக் கிறார்கள். பழனி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் தோழி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |