![]() மல்லிகா 'மில்க் ஷேக்'! ![]() ![]() ![]() கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்தின் பெயர் மில்க் ஷேக்குக்கு வைக்கப்பட்டுள்ளதாம். தொடர்ந்து பரபரப்பாக பேசப்படும் நாயகியாக மாறி விட்டார் மல்லிகா. முதலில் இந்திப் படம் ஒன்றில் 17 முத்தங்கள் கொடுத்து பரபரப்பை ஏற்றினார். பின்னர் மித் படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணம் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சிக் களேபரம் செய்தார்.
இந்த நிலையில், புதிய பரபரப்பில் புகுந்துள்ளார் மல்லிகா. அது, லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள மில்லியன்ஸ் மில்க் ஷேக் என்ற ஸ்டோரில், மல்லிகாவின் பெயரில் மில்க் ஷேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த மில்க் ஷேக் ஸ்டோர் வெஸ்ட் ஹாலிவுட்டில் உள்ளது. ப்ளூ பெர்ரி, ஸ்டிராபெர்ரி, ராஸ்ப் பெர்ரி, பிளாக் பெர்ரி, சாக்கலேட் சாறு உள்ளிட்டையும், க்ரீமும் இணைந்த மில்க் ஷேக் இது.
ஏற்கனவே ஹாலிவுட் நாயகி மைலி சைரஸ், லியானர்டோ டி காப்ரியோ ஆகியோரது பெயர்களில் இங்கு மில்க் ஷேக் உண்டு. இந்த வரிசையில் இப்போது மல்லிகா மில்க் ஷேக்கும் சேர்ந்துள்ளது. |