"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

'களேபர' போஸ் - சர்ச்சையில் நீத்து!








ஜூன் மாத இதழுக்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான, படு நெருக்கமான போஸ் கொடுத்துள்ளார் நீத்து. ஜூன் முதல் வாரம் இந்த இதழ் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.

ஆனால் இந்த புகைப்படங்களை படம் பிடிக்கப் போன இடத்தில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது தி மேன் இதழ் குழு.

சமீபத்தில் இதுதொடர்பான போட்டோ ஷூட் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது நீத்து போஸ் கொடுத்து நடித்துக் கொண்டிருந்ததை அங்கிருந்த ஹோட்டலின் ஆண் வாடிக்கையாளர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் திடீரென அவர்கள் எழுந்து நீத்துவுக்கு எதிராக கோஷமிட ஆரம்பித்தனர்.

ஆபாசமாக நீத்து போஸ் கொடுத்து நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோஷமிட்ட அவர்கள் ஜெய் மகாராஷ்டிரா என கோஷம் போட்டு போராட்டத்தில் குதிக்கவே பரபரப்பு ஏற்பட்டது.

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது போல நீத்து சந்திராவும், கிருஷிகா குப்தாவும் கொடுத்த போஸ்கள் இருப்பதாக கூறிய அவர்கள், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த மேகசின் குழுவினரை அடிக்கவும் தொடங்கியது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமைப்பினர் எனத் தெரிகிறது.

தாக்குதலோடு நிற்காமல் கேமராவையும் பறிக்க அவர்கள் முயன்றதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நீத்து அதிருப்தி தெரிவித்துள்ளார். மோதல் குறித்து அவர் கூறுகையில், இரு பெண்களுக்கு இடையிலான நெருக்கத்தைக் காட்டும் வகையிலான கான்செப்ட்தான் என்றாலும் கூட இதை ஆபாசமாகவோ, முகம் சுளிக்கும் வகையிலோ படமாக்கவில்லை. கலைநயத்தோடுதான் எடுத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் இவர்கள் தேவையில்லாமல் பிரச்சினை ஆக்கி விட்டார்கள். முதலி்ல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். ஆனால் திடீரென கோபமடைந்து போராட்டத்தில் குதித்தார்கள். என்னை பயமுறுத்தி, அரசியல் கோஷங்களையும், மத கோஷங்களையும் எழுப்பி பிரச்சினை ஆக்கி விட்டார்கள். இதனால் தான் போட்டோ ஷூட்டிங் நிறுத்தப்பட்டது என்றார்.

இருப்பினும் இந்த கலாட்டாவுக்கு முன்னர் எடுத்த புகைப்படங்களை வைத்து சமாளித்து விட்டது தி மேன் இதழ். இந்தப் படங்கள் ஜூன் மாத இதழில் வெளியாகின்றன.

அதில் சில படங்கள் இப்போதே வெளியில் வந்துவிட்டன.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections