"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நூற்றுக்கு நூறு






கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூற்றுக்கு நூறு திரைப்படம் தற்போது மீண்டும் எடுக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் செல்வா இப்படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடித்த "நான் அவனில்லை' படத்தை எடுத்த செல்வா, தற்போது விநயை வைத்து இப்படத்தை எடுத்து வருகிறார்.

இப்படத்தில் ஸ்நேகா, கார்த்திகா, சந்தியா, கஸ்தூரி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் கதாநாயகனை 5 மாணவிகள் கலாட்டா செய்து காதலிப்பதே படத்தின் கதையாகும். தற்காலத்திற்கேற்ற வகையில் கவர்ச்சி அம்சங்கள் கூடுதலாக வைத்து இப்படத்தை கலர் புல்லாக எடுத்து வருகிறாராம் இயக்குனர் செல்வா.

படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections