"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தமன்னா வெற்றியின் தேவதை
























இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நடிகை தமன்னா. தனுசுடன் நடித்துள்ள படிக்காதவன் இந்த பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கிறது. தமன்னா நடித்த படம் பொங்கலுக்கு ரிலீசாவது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் பையா, சூர்யாவுடன் அயன், அறிமுக நடிகர் சித்தார்த்துடன் ஆனந்த தாண்டவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

பொங்கல் மலருக்காக 10 கேள்விகளை வீச இனிப்பான பதில்களை அவர் நமக்கு தந்தார்.

* கல்லூரி படத்திற்கும், படிக்காதவனுக்கும் வித்தியாசம் என்ன?

கல்லூரி படத்தில் மாணவி, படிக்காதவன் படத்தில் மிரட்டல் நாயகி.

* கிளாமரா? நடிப்பா? முக்கியத்துவம் எதற்கு?

நடிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து தேவைப்பட்டால் கிளாமருக்கும் தயார்.

* நம்பர் 1 நடிகையாவது லட்சியமா?

எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

* இஷ்ட தெய்வம்?

திருப்பதி பாலாஜி

* கஷ்டகாலம்?

சக நடிகர்கள் சிறப்பாக நடிக்கும் போது நாம் அதற்கு இணையாக நடிக்க வேண்டுமே என்று சிந்திக்கும் வினாடிகள்.

* சிறப்பாக நடித்த காட்சிகள் வெட்டப்படும் போது?

அடுத்த முறை வெட்ட முடியாத அளவுக்கு நடிக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன்.

* சினிமாவில் நண்பர்கள்?

சினிமாவே என்னுடைய முதல் தோழன். அந்தவகையில் சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான்.

* மறக்க முடியாத படப்பிடிப்பு?

கல்லூரி படத்தின் கிளைமேக்ஸ்

* மற்ற மொழிகளுக்கு எந்தவிதத்தில் முன்னுரிமை?

கதையம்சத்திற்கே எப்பொழுதும் முன்னுரிமை

* பிடித்த நடிகர் இயக்குனர்?

சூப்பர் ஸ்டார் மணிரத்னம்




©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections