"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

காதலும், வீரமும் கலந்த "கந்தகோட்டை"


"ஜாம்பவான்" படத்தை தயாரித்த இ.எஸ்.கே. பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, "கந்தகோட்டை" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

"காதலில் விழுந்தேன்" படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது "மாசிலாமணி"யில் நடித்துக்கொண்டிருக்கும் நகுலன், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி, பூர்ணா. இவர், "முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு" அர்ஜுனன் காதலி ஆகிய படங்களில் நடித்தவர்.

தாமிரபரணி, சென்னை-28 ஆகிய படங்களில் முக்கிய வேடத்திலும், "தோட்டா" மற்றும் `சரோஜா'வில் வில்லனாகவும் நடித்த சம்பத்குமார், இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்றும் சந்தானம், சத்யன், பொன்வண்ணன், காதல் தண்டபாணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இ.எஸ்.கே. பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) சென்னையில் தொடங்கி புதுச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தினா, இசையமைக்கிறார். பட்டாளம் ஈ.கிருஷ்ணசாமி, ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், சக்திவேல் எஸ். இவர், ராதாமோகன், ப்ரியா ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.





©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections