சிம்புவின் "விண்ணைத் தாண்டி வருவாயா?" இது ஒரு காதல் கதைதான் என்றாலும், சிம்புவின் வழக்கமான எடக்குமடக்கு காதலெல்லாம் இதில் இருக்காது என்கிறார்கள். இதில், வில்லங்கம் ஏதும் இல்லாத காதல் மிகவும் வித்தியாசமாக காட்டப்பட உளள்து என கோலிவுட் பட்சிகள் படபடக்கின்றன. விண்ணைத் தாண்டி வருவாயா பட டிசைன்களிலேயே வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். அனிமேஷன் எஃபெக்டில் அவை அட்டகாசமாக காட்சியளிக்கின்றன. இதன் விளம்பரத்தில் சிம்பு பெயருடன் த்ரிஷா பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆக, அவர்தான் ஜோடி என்பது காட்டப்பட்டுள்ளது. மற்ற எந்தக் கலைஞரின் பெயரும் இடம்பெறவில்லை, இயக்குநர் பெயர் உள்பட. ஆனால் பட டிசைன்கள், தலைப்பைப் பார்த்தால் இது கெளதம்மேனன் இயக்கும் திரைப்படம் எனக் கருத வேண்டியிருக்கிறது. சிம்புவும் கெளதமும் இணைந்தால் அது புது வடிவத்தில் வெளிவரும் என்பது மட்டும் நிச்சயம். விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மற்றும் ஆர்.எஸ். இன்போடெய்ன்மெண்ட பிரைவேட் லிமிட்டெட் ஆகியவை இணைந்து தயாரிப்பதைப் பார்த்தால், இது முழுக்க முழுக்க் அனிமேஷன் திரைப்படமோ என்று எண்ணத் தோன்றுகின்றது ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |