தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இத்தாலி மொழிகளிலும் பாடுகிறாராம் விக்ரம் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் மிக பிரமாண்டமான படம் கந்தசாமி. இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். சுசி.கணேசன் இயக்கும் இப்படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் விவேகா எழுதிய நான்கு பாடல் பதிவாகி உள்ளது. இந்த நான்கு பாடலையும் விவேகா எழுத விக்ரம் பாடியுள்ளார்.இது குறித்து இயக்குநர் சசி.கணேசன் கூறுகையில் "தியாகராஜ பாகவதர் காலத்தில் கதாநாயகன் பாடி நடிப்பது வழக்கம். கதாநாயகர்கள்தான் எல்லா பாடல்களையும் பாடுவார்கள். அதன் பிறகு இப்போது ஒரு படத்தில் இடம் பெறும் அனைத்து பாடலையும் பாடி நடித்த நடிகர் விக்ரம் என்று சொல்லலாம். சூட்டிங்கிற்காக மலேசியா சென்றிருந்த போது அங்கு சும்மா கேளுங்க என பத்து பாடல்களை பிளே பண்ணினார். அது யாரோ பாடிய பாடல் என்று கேட்டேன். பிறகு அவர் பாடியது என்று தெரிந்ததும் பெரிய சர்ப்ரைசாக இருந்தது. அப்போது அவரிடம் சினிமாவில் பாடலையா என்று கேட்டேன். யாரும் கேட்கலையேன்னு சொன்னார்.பிறகு சென்னை திரும்பியதும் இது பற்றி இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திடம் சொன்னேன். அவர் விக்ரம் சாரை வரவழைத்து மூங்கில் காடுகளே பாடலை கேட்டார். அவருக்கு பிடித்துப் போய்விட்டது. உடனடியா அவரை கநதசாமி படத்தில் பாட வைத்தோம். முதலில் ஒரு பாடல் ரெண்டு பாடல் என பாடவைத்து கடைசியில் நான்கு பாடலையும் பாட வைத்துவிட்டார். நான்கு பாடலும் நான்கு விதமாக பாடியிருக்கிறார்.அதில் அந்த "மாமா மாமா..." ஸாங், "போடா போடி ஸாங்", சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிப்பார்கள். அவருடைய எக்ஸ்ட்ரா திறமையை வெளிக்கொண்டு வந்ததுல கந்தசாமி டீம் பெருமைப்படுகிறது. விக்ரம் அமேஸிங் ஆர்ட்டிஸ்ட், அதே போல அமேஸிங் ஸிங்கர். இந்த பாடல்கள் அடுத்த மாதம் சிடியாக வெளிவரும். தமிழில் மட்டுமல்லாது இந்தப்படத்தின் தெலுங்கு மற்றும் இத்தாலி மொழிகளிலும் விக்ரம் பாட உள்ளார்" என்றார். ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |