"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே" பள்ளிப்பருவக் காதல்கதை நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தைப் பார்த்துவிட்டு சினிமா மீது ஆர்வம் கொண்ட கிஷோர், பிரபல மலையாள நடிகர் ராஜன்.பி.தேவ் இயக்கிய மணிகரக்கள்ளன் என்ற மலையாளப்படத்தைத் தயாரித்ததோடு, ஒளிப்பதிவாளர் ஆர்.ஹெச். அசோக் இயக்கிய படத்திலும் வில்லனாக நடித்தவர். தவிர ஒன்பது மலையாளப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்த இவரது திறமையைக் கண்ட பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸ், 'மண்ணுக்குள் இருக்கும் வைரம் ஒரு நாள் பட்டை தீட்டப்பட்டு ஒளிவீசுவது போல் நீங்களும் ஒரு நாள் சினிமாவில் பிரகாசமாக வருவீர்கள்' என்று வாழ்த்தினார். அவரது வாழ்த்து இப்போது பலித்திருக்கிறது. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே என்ற படத்தை இயக்குவதோடு, வில்லனாகவும் நடிக்கிறார் கிஷோர். இவர் அசப்பில் சத்யராஜைப்போலவே இருக்கிறார் என்பதுதான் வியப்பு. வீட்டில் இருக்கும்போது மனைவி மீராவாசுதேவன் மீது அன்பும் பாசமும் கொண்டவராகவும், வெளியே அராஜகமான இன்ஸ்பெக்டர் பரமசிவமாகவும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் கிஷோர். கதை திரைக்கதை வசனம் எழுதி எஸ்.கிஷோர். இயக்குனராக அறிமுகமாகும் "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே" படத்தை விசாக் மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் கிரிஜா, ஆகாஷ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தில் சந்துரு என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, சிப்பி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர, மீராவாசுதேவன், நாஸர், சீதா, பொன்னம்பலம், காதல் சுகுமார், அஜெய்ரத்னம், முத்துக்காளை, செந்தில், குமரிமுத்து, பாண்டு, ஆர்த்தி, பாபிலோனா, ரிஷா, லக்ஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் காதல்கதையாக உருவாக்கப்படும் இப்படத்தில் நாயகன், நாயகி இருவரும் ப்ளஸ்டூ படிப்பவர்கள். அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் பரமசிவம் (கிஷோர்) பள்ளி மாணவி பிரியா (சிப்பி) மீது மோகம் கொண்டு அவரை அடையத் துடிக்கிறார். அவரது ஆசை ஈடேறியதா இல்லையா என்பதே குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மற்றும் கேரளாவில் இயற்கை எழில்மிக்க இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவு: ஆர்.ஹெச்.அசோக், இசை: அமுதபாரதி,பாடல்கள்: யுகபாரதி, படத்தொகுப்பு: பி.சி.மோகன்தாஸ், சண்டைப்பயிற்சி: மாஃபியா சசி, நடனம்: ட்ரீம்ஸ் காதர், அக்ஷயா ஆனந்தி, கூல் ஜெயந்த், கலை: ரூபேஷ், தயாரிப்பு: கிரிஜா, ஆகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: எஸ்.கிஷோர் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |