பிப். 14-ல் 'ஸ்லம்டாக் மில்லியனர்' ரிலீஸ் கோல்டன் குளோப் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் தமிழில் வரும் 6 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. டப்பிங் பணிகள் முடியாததால் படம் 14ம் தேதி திரைக்கு வருகிறது.சாதாரண படம் என்றால் பெயர் தெரியாத ஆர்ட்டிஸ்டுகளை வைத்து டப்பிங்கை அவசரமாக முடித்திருக்கலாம். இது, அனைவரும் எதிர்பார்க்கும் படம். பிரபலங்கள் டப்பிங் பேசினால் தான் படத்துக்கு மரியாதை.அனில் கபூருக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும், ஹீரோவுக்கு சிம்புவும், இர்பான்கானுக்கு ராதாரவியும் டப்பிங் பேசியிருக்கிறார்கள். ஸ்டார் வேல்யூவுடன் தமிழில் வெளியாகிறது ஸ்லம்டாக் மில்லியனர். ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |