"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

'சிவப்பு' ஆக மாறிய 'நூறு' படம்


ரமணா ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம் 'நூறு'. ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டெண்ட் கிங்ஸ்லி, இந்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பு சம்பத்குமார். 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தில் நடிக்கும் ராமகிருஷ்ணன், 'நூறு' படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர் சேரனின் முன்னாள் அசிஸ்டெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் தர்ஷனா நாயகியாக நடிக்கிறார்.'நூறு' படத்தின் பெயரை தற்போது 'சிவப்பு' என மாற்றியுள்ளனர். ஏற்கனவே 'நூற்றுக்கு நூறு' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதால் குழப்பத்தை தவிர்க்க இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.





©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections