"ஸ்ரீசரவணபவ மூவிஸ்' சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தயாரிக்கும் படம் "காதல்தோழி" இப்படத்தில் புதுமுகம் சதீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தற்போது உருவாகியுள்ள "குளிர் 100' என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அர்ச்சனா நடிக்கிறார். மற்றும் முக்கிய பாத்திரங்களில் விமலா ராமன், கலாபவன் மணி, செந்தில், கல்பனா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் பள்ளி மாணவ, மாணவிகள் வேடத்தில் இருபது பேரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் நிதின் ராமகிருஷ்ணன். இவர் பதினேழு வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரதன் சந்திரசேகர் வசனம் எழுத, வீ.தஷி இசை அமைக்கிறார். பாடல்களை தாணுகார்த்திக், உமா சுப்ரமணியம், நெல்லை பாரதி, முருகன் மந்திரம் ஆகியோர் எழுதுகின்றனர். பாசத்துக்கு ஏங்கும் ஒரு ப்ளஸ் டூ மாணவியிடம் சக மாணவன் ஒருவன் அன்பு காட்டுகிறான். இதை காதல் என்று மற்றவர்கள் சொல்ல, அதை முதலில் அவன் ஏற்க மறுக்கிறான். ஆனால் பிறகு அவள் மீதுள்ள அதிக அன்பின் காரணமாக அவளை காதலிப்பதாக ஒப்புக்கொள்கிறான். அவனது காதலுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். அவனது தோழி அவனது காதலை ஏற்றுக்கொண்டாளா? இதனால் அவன் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறான் என்பது படம். "மாணவர்களின் அந்த வயதுக்கே உரிய வேகம், கோபம், நட்பு, மோதல், பாசம் என அனைத்து இயல்பான உணர்வுகளும் இப்படத்தில் இடம்பெறும். அது ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்'' என்கிறார் இயக்குனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் குன்னூரில் நடந்து வருகிறது. ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |