"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சசி இயக்கும் ஆக்சன் படம்


'பூ' படத்தை தந்து அனைத்து தரப்பினரின் மனங்களையும் மென்மையாக வருடியவர் இயக்குனர் சசி. இவர், திடீரென ஆ‌க்சன் படத்திற்கு மாறியுள்ளார்.ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிறைய இடைவெளி எடுத்துக் கொள்ளும் சசி, அதிசயமாக திடீரென ஆ‌க்சன் படத்திற்கு ஒரே மாதத்தில் தயார் ஆகிவிட்டார்.'பூ'வை தயா‌ரித்த மோசர் பேர், சசியின் ஆ‌க்சன் படத்தையும் தயா‌ரிக்கிறது. தனது ஒன்-லைனை ஆர்யாவிடம் கூறியிருக்கிறார் சசி.ஏற்கனவே 'சர்வம்', 'மதராஸப் பட்டணம்', 'ஆறுவது சினம்' என்று வ‌ரிசை கட்டி நிற்கும் படங்களுக்கு நடுவில் சசியின் படத்துக்கு ஆர்யா கால்ஷீட் கொடுப்பாரா?. இந்த சந்தேகம் சசிக்கும் உள்ளது. அதனால் தான் தனது கதையை ‌‌‌ஜீவனிடமும் கூறியிருக்கிறாராம்.






©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections