18 வயதுக்குள் சம்பாதிப்பாய் "ஜோதிடம் பலித்தது" - தமண்ணா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார் தமண்ணா. தனுசுடன் படிக்காதவன் படத்தில் சூர்யா ஜோடியாக "அயன்" படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். வெற்றிப்பயணம் பற்றி தமண்ணா சொல்கிறார்.திரையுலகில் முக்கிய இடத்தை இளம் வயதிலேயே பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. என் பெயருடன் "எச்" சேர்த்துள்ளேன். எண்கணித ஜோதிடப்படி இந்த பெயர் மாற்றம் செய்துள்ளேன்.ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். சிறு வயதில் ஜோதிடக்காரர் ஒருவர் என் ஜாதகத்தை பார்த்து 18 வயதுக்குள் சம்பாதிப்பாய் என்று கூறினார். அவர் சொன்னது பலித்தது. சினிமாவில் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன். அதனால் ஜோதிடம் மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு.தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழிலும் நடிக்கிறேன். தமிழிலும் நிறையவாய்ப்பு வருகிறது. ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன். இந்தியில் "ஹிட்"டான படமொன்று தமிழில் "ரீமேக்" ஆகிறது. அதிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். தெலுங்கில் "ஹேப்பி டேஸ்" வெற்றிக்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் வருகிறது. தமிழில் பிசியாக இருப்பதால் அவற்றுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.வெற்றி தோல்விகளை சமமாக கருதுகிறேன். படம் ஹிட்டானால் சந்தோஷப்படுவதும், தோற்றால் முடங்கிப்போவதும் எனக்கு பிடிக்காது. ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |