முமைத்கான் கதாநாயகியானார் தமிழ், தெலுங்கில் 30 படங்களில் குத்தாட்டம் ஆடியிருப்பவர் முமைத்கான். இந்தியில் 10 படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். நமீதாவுக்கு அடுத்த படியாக கவர்ச்சியில் கலக்கு பவர் இவர்தான் என்கிறது திரையுலக வட்டாரம்.முமைத்கானுக்கு திடீர் கதாநாயகி அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மச்சக்கன்னி என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகிறது. பிரபல தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் படமாக இது உருவாகிறது.பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி உள்ள விஜயின் வில்லு படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். விக்ரம் நடித்துள்ள கந்தசாமி படத்தில் பம்பரக்கண்ணாலே என்ற பழைய பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலிலும் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |