"1977" படத்தில் "ஹாலிவுட்" பாணியில் உச்சக்கட்ட காட்சி! சரத்குமார் கதாநாயகனாக நடித்து, இம்மாதம் திரைக்கு வர இருக்கும் "1977"' வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படம். படத்தின் கதை 4 பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. முதல் பாகம் கிராமத்தில் நடைபெறுவது போலவும், இரண்டாம் பாகம் நகர்ப்புறத்தில் நடைபெறுவது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் பாகம் மலேசியாவில் நடைபெறும். நான்காம் பாகம், படத்தின் உச்சக்கட்ட காட்சி."ஹாலிவுட்" படங்களைப்போல் படத்தின் உச்சக்கட்ட காட்சி, 30 நிமிடங்கள் வரும். படத்தில் சரத்குமார், மலேசிய தமிழராக வருகிறார். புதைந்துபோன உண்மைகளை தேடி, அவர் மலேசியா வருவது போல் அவருடைய கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.படத்தில், அவருக்கு ஜோடியாக நமீதா, பர்ஸானா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். தினேஷ்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். வித்யாசாகர், இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.கே. பிக்சர்ஸ் சார்பில் இந்த படம் தயாராகி இருக்கிறது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |