விருத்தாசலத்தில் "கிருஷ்ண லீலை" ஜீவன்-புதுமுகம் மேக்னா ஜோடியாக நடிக்க, கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தனது 56-வது தயாரிப்பாக, `கிருஷ்ண லீலை' என்ற படத்தை தயாரித்து வருகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு விருத்தாசலத்தில் நடந்தது. மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுவது போலவும், அதில் கட்சி தலைவர் கோட்டா சீனிவாசராவ் பேசுவது போலவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அவருடைய பேச்சை கேட்க, லட்சம் பேர் திரண்டிருப்பது போல் துணை நடிகர்-நடிகைகள் மற்றும் பொதுமக்களை பயன்படுத்தி, அந்த காட்சியை படமாக்கினார், டைரக்டர் ஸெல்வன்.படப்பிடிப்பையொட்டி, விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டத்தின் பின்னணியில் கோவில் கோபுரங்கள் தெரிவதுபோல் படமாக்கப்பட்டது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |