சினேகா நடித்த தெலுங்கு படம் தமிழில், "டப்" ஆகிறது சினேகா நடித்த "மனசு பலிக்கே மவுனராகம்" என்ற தெலுங்கு படம், "ஏன் இந்த மவுனம்" என்ற பெயரில் தமிழில் "டப்" ஆகிறது.அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த காதல் கதை இது. சினேகா ஜோடியாக விக்ரமாதித்யா நடித்து இருக்கிறார். வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில், தென்றலாக நுழைகிறாள், ஒரு பெண். ஒரு கட்டத்தில் அவள் புயலாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இரண்டு பேரின் வாழ்க்கையிலும் நடைபெறும் உணர்ச்சிகரமான போராட்டமே இந்த படத்தின் கதை.நாகபூஷன் டைரக்டு செய்த படம் இது. பிறைசூடன் வசனம் எழுத, கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீதேகா ஆர்ட்ஸ் சார்பில் தேகா தேவ்குமார் தயாரித்துள்ளார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |