முரட்டுத்தனமான காதலை மாறுபட்டமுறையில் சொல்லும் "ஈசா" ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையில் புகழ்பெற்று விளங்கும் ஜே.ஜெயகிருஷ்ணா, ஜெ.கே.கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் ஈசா.இப்படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், இந்தப்படம் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லும் வகையில் பிரம்மாண்டமான படமாக உருவாகிறது. இதுவரை விக்னேஷ் நடித்த படங்களின் பட்ஜெட்டைவிட இருமடங்கு செலவில் தயாராகும் இப்படத்தில் இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் விக்னேஷ். ஈசா படத்தின் கதாநாயகியாக லக்ஷனா நடிக்கிறார். ஈசா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாலகணேசா என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார். விக்னேஷ், லக்ஷனா தவிர கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளுசபா மனோகர் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள். அதோடு, ராஜேந்திரன், வி.பி.டி.பிரசாத், இ.கோ.வெங்கடேஷ் ஆகிய மூவரும் வில்லன்களாக அறிமுகமாகிறார்கள். முரட்டுத்தனமான கதாநாயகனுக்கும், எதுவுமே அறியாத நாயகிக்கும் இடையில் ஏற்படும் முரட்டுத்தனமான காதலை மாறுபட்டமுறையில் சொல்லும் ஈசா படம் உப்பளத்தின் பின்னணியில் நிகழ்கிறது. இம்மாதம் 10 ஆம் தேதி தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்கி, இருபத்தைந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |