இன்டர்நெட்டில் நமீதா . . . ஐ, 3 கோடி பேர் பார்த்தனர்; ஐஸ்வர்யாராயை முந்திய நமீதா இன்றைய இளம் தலை முறையினர் எப்போதும் மூழ்கிகிடக்கும் இன்டர்நெட்டில் கூகுள்சர்ச் என்ஜினை பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பிரபலங்கள் பலரின் புகைப்படங்களும் இதில் தாராளமாக இருக்கும். இதில் தங்களின் மனங்கவர்ந்த நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை தேடிப்பார்த்து டவுன்லோடு செய்து ரசிப்பவர்கள் கோடிக்கணக்கா னோர் உள்ளனர்.அந்தவகையில் கூகுள் இணைய தளத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகை கள் பட்டியலில் நமீதா 3-வது இடத்தை பிடித்துள்ளார். நமீதாவின் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் சுமார் 3 கோடி பேர் தேடிப் பார்த்து டவுன்லோடு செய்துள்ளனர்.முதலிடத்தை நடிகை கத்ரீனா கைப்பும், இரண்டாம் இடத்தை நடிகர் சல்மான் கானும் பிடித்துள்ளதாக கூகுள் இணையதளம் அறிவித்துள்ளது. ஐஸ்வர்யாராய், கரீனாகைப், அமீர்கான், ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் கூட இந்த பட்டியலில் நமீதாவுக்கு பின்னர் தான் இருக்கின்றனர். இதுகுறித்து நமீதா கூறுகை யில்`எனக்கு கிடைத்த இந்த பெருமைக்கு என்னுடைய ரசிகர்கள் தான் காரணம். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |