சிம்புவுடன் மீண்டும் நடிக்கமாட்டேன் -நயன்தாரா நடிகை நயன்தாரா கூறியதாவது:- "ஆதவன்" படத்தில் நடித்து வருகிறேன். வேறுபடங்கள் கைவசம் இல்லை. தமிழில் பில்லா யாரடி நீ மோகினி இரண்டும் நான் நடித்த படங்கள் எனக்கு பிடித்தமானவை. ரஜினி எனக்கு பிடித்தமான நடிகர்.கமலஹாசனுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். அஜீத்துடன் `பில்லா'வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவருடன் மீண்டும் நடிப்பேன். விஜய் என் நெருங்கிய நண்பர். இந்திப் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. இந்தி திரையுலகில் போட்டி அதிகம். அங்கு தாக்குபிடித்து நிற்பது கடினம். எனவே இந்திப்படங்களில் நடிக்கமாட்டேன். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பேன்.திருமணம் எப்போது நடக்கும் என்று என்னிடம் எல்லோரும் கேட்கிறார்கள். திருமணம் செய்யாமலேயே தனியாக சந்தோஷமாய் வாழ முடியும். சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கமாட்டேன். அவரைப்பற்றி பேச எதுவும் இல்லை. உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து இருக்கிறேன். உணவு கட்டுப்பாடும் கடைபிடிக்கிறேன். ரசிகர்கள் எனக்கு ரசிகர்மன்றங்கள் அமைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |