"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தமன்னாவுக்கு லிங்குசாமி கண்டிஷன்


'படிக்காதவன்' வெற்றியில் திளைத்திருக்கும் நடிகை தமன்னா அதே ஜோரில் தனது அடுத்த படமான 'பையா'விற்கு தயாராகிவிட்டார். இயக்குனர் லிங்குசாமியின் இந்த படத்தில், தமன்னா கார் ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறதாம். ஆனால் தமன்னாவுக்கோ கார் ஓட்டத் தெ‌ரியாது. ஒரு காட்சி என்றால் சமாளிக்கலாம். பல காட்சிகள் இருந்தால்?.இயக்குனர் லிங்குசாமியும் விடுவதாக இல்லை. என்ன ஆனாலும் சரி, கார் ஓட்டக் கற்றுக் கொண்டு வாருங்கள், பிறகு படப்பிடிப்பை பார்க்கலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.இயக்குனர் கட்டளை மீற முடியுமா என்ன? மும்பையில் தனது தந்தையின் மேற்பார்வையில் தற்போது கார் ஓட்ட கற்று வருகிறார் தமன்னா.










©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections