"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சொல்ல... சொல்ல... இனிக்கும்...


"எம்"சினிமா வழங்கும் சொல்ல... சொல்ல... இனிக்கும்... இப்படத்தில் நவ்தீப், பிரகாஷ்ராஜ், அபிநய், ஆஷிஷ் வித்யார்த்தி, விஜயகுமார், சார்லி, சத்யன், சூப்பர் குட் லஷ்மணன், மதுமிதா, மல்லிகா கபூர், சுஜா, சரா அலம்பரா(அறிமுகம்), மீரா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு_ ஆர்தர் ஏ.வில்சன், கலை_ மிலன், சண்டை பயிற்சி_ சூப்பர் சுப்பராயன், பாடல்கள்_ முத்துகுமார், விவேகா, தங்கம் மூர்த்தி, இசை_ பரத்வாஜ், எடிட்டிங்_ விஜயன், தயாரிப்பு மேற்பார்வை_ பென்ஜமின், தயாரிப்பு_ எம்.சினிமா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்_ ஜி.முரளி அப்பாஸ்.ஆஷிஷ், நவ்தீப்_ அபிநய் மற்றும் நண்பர்களை விளையாட்டு மைதானத்தில் கலாட்டாவில் ஈடுபடுவார்கள் என்று காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்க... அங்கே வரும் பிரகாஷ்ராஜ், நவ்தீப் குரூப்பை வெளியே விடச் சொல்லி கேட்க, அதற்கு ஆஷிஷ், இது போலீஸ் ஸ்டேஷன்... இங்கே நான் எஸ்.ஐ., அவர்களை விட முடியாது என ஆவேசபட, பிரகாஷ்ராஜ், ''நிங்க வெறும் எஸ்.ஐ., உங்களுக்கு மேலே இன்ஸ்பெக்டர், ஏ.சி., டி.சி., டி.ஜி.பி., உள்துறை செயலாளர், உள்துறை அமைச்சர் இருக்காங்க, இதுல யார் சொன்னா விடுவீங்க என்று கேட்க... பிரகாஷ்ராஜை பற்றி ஏட்டு சார்லி ஆஷிஷ்க்கு எடுத்துச் சொல்ல, வேண்டா வெறுப்பாக நவ்தீப் குரூப்பை அனுப்பி வைக்கும் காட்சி ஏ.ஆர்.எஸ். போலீஸ் ஸ்டேஷனில் படமாக்கப்பட்டது.







©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections